செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து ரெயிலை மறித்த பெண்கள் உள்பட 350 பேர் கைது

Published On 2018-07-02 11:13 GMT   |   Update On 2018-07-02 11:13 GMT
எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து ரெயிலை மறித்த பெண்கள் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:

மார்க்கம்யூனிஸ்டு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க அவசர சட்டம் இயற்றி அதை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.

வன்கொடுமையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.

கம்யூனிஸ்டு கட்சியினருடன் தலித் அமைப்புகளும் சேர்ந்து இந்த மறியலில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் காளைமாடு சிலை அருகே இவர்கள் குவிந்தனர்.

மாநகர செயலாளர் ரகுராமன், செயற்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகட்சி அமைப்பு செயலாளர் விநாயக மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாநகர செயலாளர் அம்ஜத்கான், ஜாபர் அலி, பைசல் அகமது.

தமிழ்புலிகள் மாநில பொது செயலாளர் இளவேனில் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கோபால் உள்பட 75 பெண்கள் உள்பட 350 பேர் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை முழங்கியபடி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

ரெயில் நிலையம் முன் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முடியாத வண்ணம் பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜ்குமார், எட்டியப்பன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் இருந்தனர்.

ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் பேரி கார்டை தள்ளிவிட்டு ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர்.

3-வது பிளாட் பார்முக்கு சென்ற அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த கோவை- ஈரோடு பயணிகள் ரெயில் முன் என்ஜினில் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பலர் தண்டவாளத்திலும் ரெயிலை மறித்து அமர்ந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 350 பேரும் கைது செய்யப்பட்டனர். #tamilnews
Tags:    

Similar News