செய்திகள்

வேளாங்கண்ணியில் இருந்து மனைவி-குழந்தைகளுடன் இலங்கைக்கு படகில் தப்ப முயன்றவர் கைது

Published On 2018-06-28 17:15 GMT   |   Update On 2018-06-28 17:15 GMT
வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மனைவி-குழந்தைகளுடன் இலங்கைக்கு படகில் தப்ப முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நாகை கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேளாங்கண்ணி சின்ன மாதா கோவில் அருகே அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நின்று கொண்டு இருந்ததை பார்த்தனர்.

அவர்கள் அருகில் சென்ற கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின்போது அவர்கள், முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களை போலீசார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள், இலங்கை திரிகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்மோகன், அவரது மனைவி சாந்தினி மற்றும் குழந்தைகள் சஜிர்தனா, ஸ்ரீவித் என்பது என்பது தெரியவந்ததுய இவர்கள் மதுரை அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்துள்ளதும் தெரியவந்தது.

இவர்கள் இலங்கைக்கு செல்ல முடிவு செய்து அதற்காக ஏஜெண்டுகள் மூலம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கடற்பகுதியில் இருந்து கள்ள படகு மூலம் இலங்கை செல்வதற்காக படகிற்கு காத்திருந்தபோது கியூ பிரிவு போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும், இவர்கள் இலங்கைக்கு செல்ல ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News