செய்திகள்

இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் - சென்னை மாணவருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Published On 2018-06-25 12:39 IST   |   Update On 2018-06-25 12:39:00 IST
குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை மாணவரை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். #ChessGrandmaster #Praggnanandhaa
சென்னை:

சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா குறைந்த வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளார்.

குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உலகின் 2-வது வீரரான அவரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவை அவர் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சாதனையை விட சிறுவனின் கனவை ஊக்குவித்த தந்தையின் செயல் பாராட்டுக்குரியது என்று ரமேஷ் பாபுவிடம் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். அதோடு மாணவன் பிரக் ஞானந்தாவுக்கு முழுமையான ஆதரவையும் அளிக்க தயாராக இருப்பதாக அவரிடம் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.

இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரமேஷ் பாபு தனது மகனை பார்க்க அழைத்து வருவதாகவும் கமல்ஹாசனிடம் தெரிவித்து இருக்கிறார். #ChessGrandmaster #Praggnanandhaa #Kamalhaasan #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News