செய்திகள்

வில்லிவாக்கத்தில் 2 பேரை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்

Published On 2018-06-21 16:56 IST   |   Update On 2018-06-21 16:56:00 IST
சென்னை வில்லிவாக்கத்தில் ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம்:

வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ், சிவா. ஏ.சி. மெக்கானிக். இவர்கள் நேற்று இரவு வில்லிவாக்கம் நாதமுனி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த கிஷோருக்கும், சதீசுக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே கிஷோர், அவரது நண்பர்கள் ஆகாஷ், ரஞ்சித், விஜய், கார்த்தி ஆகிய 5 பேர் உருட்டு கட்டையால் சதீஷ், சிவாவை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்கள். தப்பி ஓடி குடியிருப்பில் புகுந்த இருவரையும் துரத்தி தாக்கினர்.

படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News