செய்திகள்

ஜெயலலிதா பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

Published On 2018-06-20 06:40 IST   |   Update On 2018-06-20 06:40:00 IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
திண்டுக்கல்:

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், கடந்த 18-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நான் கலந்து கொண்டு பேசினேன். அப்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டதை பற்றி குறிப்பிட்டேன்.

மேலும் ஜெயலலிதாவின் புகழை வைத்து, 30 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்று கருத்துப்பட பேசினேன்.

அதைத்தவிர, ஜெயலலிதாவை பற்றி தவறாக எந்த கருத்தையும் பேசவில்லை. நான் என்றைக்கும் ஜெயலலிதாவின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
Tags:    

Similar News