செய்திகள்

பெரியார் அணை 17-ந்தேதி திறப்பு- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Published On 2018-06-14 10:49 IST   |   Update On 2018-06-14 10:49:00 IST
கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து 17-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று, கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து 17-ந்தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் பொது மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PeriyarDam #TNCM #EdappadiPalanisamy

Tags:    

Similar News