செய்திகள்

அவனியாபுரத்தில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2018-06-13 14:46 IST   |   Update On 2018-06-13 14:46:00 IST
அவனியாபுரத்தில் மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவனியாபுரம்:

அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஆண்டவர் மற்றும் போலீசார் ஈசனோடை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிலைமானில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். லாரியின் உரிமையாளரான பனையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தனை விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News