செய்திகள்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-06-12 17:15 GMT   |   Update On 2018-06-12 17:15 GMT
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர்:

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். செய்யும் தொழிலே தெய்வம், அதை குழந்தைகள் செய்தால் பாவம், குழந்தைகளின் வருமானம், பெற்றோருக்கு அவமானம், புத்தகம் ஏந்தும் கைகள், பத்து பாத்திரம் ஏந்தலாமா?, குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்,

“குழந்தை தொழிலாளர்களையோ, வளரும் இளம் பருவத்தினரையோ எவ்வகையான தொழிலிலும் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலமானது புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஊர்வலம் தொடங்கிய இடத்திற்கு வந்து முடிவடைந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News