செய்திகள்

வெண்ணந்தூர் அருகே கிணற்றில் மூழ்கி பெண் பலி

Published On 2018-06-11 15:55 GMT   |   Update On 2018-06-11 15:55 GMT
கிணற்றில் நீச்சல் பழகிய போது பெண் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம்:

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது மனைவி கோகிலாவுடன் (வயது 23). இவர் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமம் புரசல்பட்டியில் உள்ள அவரது உறவினர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார். 

நேற்று மதியம் அக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் அருகிலுள்ள விவசாயி ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கோகிலா நீச்சல் பழக சென்றார். அவருடன் கணவர் சுப்பராயன் மற்றும் உறவினர்கள் சென்றனர். கிணற்றின் ஆழம் எவ்வளவு என்பது தெரியாமல் கோகிலா கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து கிணற்று தண்ணீரில் மூழ்கினார். 

கிணற்றில் 35 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதனால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெறியேற்றினார்கள். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கோகிலாவை உடனடியாக மீட்க முடியவில்லை. இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் நிலைய பொறுப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் விரைந்து சென்றனர்.  

அவர்கள் 6 மணி நேரம் போராடி கோகிலாவை இன்று விடியற்காலை 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.  உறவினர் வீட்டுக்கு வந்த கோகிலா கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
Tags:    

Similar News