செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மண் கடத்திய 4 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மண் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மண் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையில் போலீசார் அய்யனார் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வைகை ஆற்றுப்படுகையில் சிலர் டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சின்னமனூர் ஒத்தத் தெருவைச் சேர்ந்த பசும்பொன்பாண்டி, குட்டமுத்து, முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ், மாரியப்பன் என்பது தெரிய வந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.