செய்திகள்

ஹூக்கா போதை சிகரெட்டுக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள் - பார் நடத்திய 8 பேர் கைது

Published On 2018-06-11 10:38 GMT   |   Update On 2018-06-11 10:38 GMT
சென்னை நுங்கம்பாக்கத்தில் தடையை மீறி ஹூக்கா பார் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:

சென்னையில் பல இடங்களில் தடையை மீறி ஹூக்கா போதைபார்கள் செயல்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதுபோன்ற பார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வந்த ஹூக்கா பார் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஜெகநாதன் சாலையிலும் ஹூக்கா பார் இயங்குவது தெரியவந்தது.

திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாக ரத்தினம் மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக விக்னேஷ், மணி, செல்வா, பாரதிராஜா, கவுதமராஜ், அமோஸ், தேலு, தேகியாம் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து புகைபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 8 பைப்புகள், 4 பாட்டில் போதை பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஹூக்கா போதைக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் அடிமையாகி உள்ளனர். நுங்கம்பாக்கம் ஹூக்கா பாரில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு இளம்பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவிகள் என்பது தெரியவந்தது. ஹூக்கா சிகரெட் ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News