செய்திகள்

திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2018-06-08 14:35 IST   |   Update On 2018-06-08 14:35:00 IST
போலீஸ் பிடியில் உள்ள காதலனை விடுவிக்ககோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வயலார் நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரும் திருமழிசையை சேர்ந்த எபினேசர் ராஜனும் காதலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எபினேசர் ராஜனை ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக வெள்ளவேடு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் சங்கீதா, போலீஸ் நிலையத்துக்கு வந்து எபினேசர் ராஜனை விடுவிக்ககோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே எபினேசர் ராஜனை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று நினைத்து சங்கீதா இன்று காலை கோர்ட்டுக்கு வந்தார்.

அப்போது திடீரென அவர், எபினேசர் ராஜனை விடுவிக்க வேண்டும் இல்லையேல் தற்கொலை செய்வேன் என்று கூச்சலிட்டபடி கோர்ட்டு வளாக மாடிக்கு ஏற முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர்.

உடனே சங்கீதா மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவத்தால் திருவள்ளூர் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News