செய்திகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு: கணிதத்தில் 95.24 சதவீதம் - உயிரியல் பாடத்தில் 96.96 சதவீதம் தேர்ச்சி

Published On 2018-05-30 08:08 GMT   |   Update On 2018-05-30 08:08 GMT
பிளஸ் 1 பொதுத்தேர்வில் கணிதத்தில் 95.24 சதவீதமும், உயிரியல் பாடத்தில் 96.96 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். #TNHSCResult #PlusOneResult2018
சென்னை:

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

இதில் அறிவியல் பாடப்பிரிவுகளில் 92 சதவீதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.2 சதவீத பேரும், கலை பிரிவுகளில் 80 சதவீதம் பேரும், தொழிற் பாடப் பிரிவுகளில் 82.3 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

உயிரியல் பாடத்தில்தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இதில் 96.96 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த பாடத்தை 3 லட்சத்து 4 ஆயிரத்து 281 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 27 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அதற்கு அடுத்தப்படியாக கணிதம் பாடத்தில் 95.24 சதவீதம் தேர்ச்சி இருந்தது. 4 லட்சத்து 25 ஆயிரத்து 920 மாணவ-மாணவிகள் இந்த பாடத்தில் தேர்வு எழுதியதில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 667 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை 3,14,964 பேர் எழுதினர். இதில் 3,00,189 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.31 ஆகும்.

இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் 93 ஆகும். இந்த பாடத்தில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வேதியல் பாடத்தில் 92.74 சதவீதம் தேர்ச்சியாகும். இந்த பாடத்தில் 4,84,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

விலங்கியல் பாடத்தில் 91.86 சதவீதமும், தாவரவியலில் 89.32 சதவீதமும் தேர்ச்சி இருந்தது. வணிகவியலில் 93.7 சதவீத மாணவ-மாணவிகளும் கணக்கு பதிவியலில் 93.8 சதவீதமும் தேர்வாகி இருந்தனர்.

‘பிளஸ்-1’ பொதுத் தேர்வின் மொத்த மதிப்பெண் 600. இதில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் 36,380 பேர் பெற்றுள்ளனர். இதில் 25,412 பேர் மாணவிகள். மீதியுள்ள 10,968 பேர் மாணவர்கள்.

451-500 மதிப்பெண் வரை 64,817 பேரும், 426-450 மார்க் வரை 48,532 பேரும், 401-425 மதிப்பெண் வரை 61,351 பேரும் பெற்றுள்ளனர்.

351முதல் 400 மார்க் வரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 581 மாணவ-மாணவிகளும், 301 முதல் 350 மதிப்பெண் வரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 765 பேரும் பெற்றுள்ளனர்.  #TNHSCResult #PlusOneResult2018

Tags:    

Similar News