செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் - வைகோ

Published On 2018-05-28 20:41 GMT   |   Update On 2018-05-28 20:41 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். #SterliteProtest #Thoothukudi #Vaiko
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் அ.தி.மு.க. அரசு கோரிக்கை கொடுக்கச் சென்ற நிராயுதபாணியான மக்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி 13 பேரின் உயிரை பலிகொண்டு, பலரை மரண காயப்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலையால் ஏற்பட்ட புற்றுநோயால் மக்கள் மடிந்ததற்கும், விவசாயம் சீரழிந்ததற்கும், நச்சு வாயு பரவியதால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்நலக் கேட்டுக்கும் அ.தி.மு.க. அரசே பொறுப்பு.

தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழக மக்களின் மொத்த வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள அ.தி.மு.க. அரசு, பழியில் இருந்து தப்பித்துக்கொள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஆலை நிறுவனர் அனில் அகர்வால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆலையை இயக்குவேன் என்று அறிவித்தார்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடுக்கும் வழக்கில், ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டில் ஆலையை இயக்கும் தீர்ப்பு வருமானால் எங்கள் தமிழ் மண்ணில் நடத்த விடமாட்டோம். லட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஆலையை அப்புறப்படுத்துவோம். காவல்துறையை அனுப்பினாலும், மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பினாலும் அதனை எதிர்கொண்டு ஆலையை அகற்றியே தீருவோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கெல்லாம் பொறுப்பேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.  #SterliteProtest #Thoothukudi #Vaiko
Tags:    

Similar News