செய்திகள்

திருவண்ணாமலை -குடியாத்தத்தில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்: ஏராளமானோர் கைது

Published On 2018-05-25 17:03 IST   |   Update On 2018-05-25 17:03:00 IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருவண்ணாமலை, குடியாத்தத்தில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் எ.வ.வேலு உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட் டோர் பஸ்களை மறித்து போராட்டம் செய்தனர். எ.வ.வேலு உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி தலைமையில் தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

தி.மு.க.வினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டம் செய்தனர்.

Tags:    

Similar News