செய்திகள்

பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - ஐகோர்ட்

Published On 2018-05-24 09:24 GMT   |   Update On 2018-05-24 10:32 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடற்கூறு அறிக்கையை வரும் 30-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi
சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.

‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என மனுதாரர் வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், பலியனாவர்களின் உறவினர்கள் உடலை கேட்பதால் சடலத்தை பதப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பபெற வேண்டும் என தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மே.30-ம் தேதி பலியானவர்களில் உடற்கூறு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனினும், அரசு கோரிக்கை தொடர்பாக மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News