செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவை முடக்கம் அபாயமானது - கமல்ஹாசன்

Published On 2018-05-23 17:53 GMT   |   Update On 2018-05-23 17:53 GMT
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது மிகவும் அபாயகரமானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #KamalHaasan
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையே, இன்றும் தூத்துக்குடியில் சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், வன்முறை பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது மிகவும் அபாயகரமானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  



இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கி வைப்பீர்களா? சரித்திரம் காணாத  புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர்கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கம் செய்துள்ளது அபாயகரமானது. தூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி கூறினார் எனவும் தெரிவித்துள்ளார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #KamalHaasan
Tags:    

Similar News