செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் கம்யூனிஸ்டு மறியல்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகினர். இதை கண்டித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகினர். இதை கண்டித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் திடீரென வேலூர்- திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர் களை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.