செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு முடிவு - காஞ்சீபுரம், திருவள்ளூரில் மாணவிகள் அதிக தேர்ச்சி

Published On 2018-05-23 10:07 GMT   |   Update On 2018-05-23 10:07 GMT
10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 52 ஆயிரத்து 365 பேர் தேர்வு எழுதினர். இதில் 91.58 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.14 சதவீதமும், மாணவிகள் 95.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள் 85.76 சதவீதம், நகராட்சி பள்ளிகள் 87.71 சதவீதம், ஆதி திராவிட நலப்பள்ளி 86.18 சதவீதம், சமூகநலத்துறை பள்ளிகள் 93.02 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 88.12 சதவீதம், தனியார் பள்ளிகள் 98.09 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறது. மாநில அளவில் காஞ்சீபுரம் மாவட்டம் 29-வது இடத்தை பிடித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 222 பள்ளிகளில் 47 ஆயிரத்து 583 பேர் தேர்வு எழுதினர். இதில் 43 ஆயிரத்து 584 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 94.52 சதவீதமும், மாணவர்கள் 88.72 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Tags:    

Similar News