செய்திகள்

தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்கீடு

Published On 2018-05-22 04:29 IST   |   Update On 2018-05-22 04:29:00 IST
தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க் கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமைச் செயலகத்தின் 4-வது பிரதான நுழைவு வாயிலின் அருகே ஒரு அறை ஒதுக்கப்பட்டது.

ஆனால் அந்த இடம் போதவில்லை என்றும், கூடுதல் இடம் வேண்டும் என்றும் ஏற்கனவே தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது உள்ள அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையை மு.க.ஸ்டாலினுக்காக ஒதுக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அறை மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படும். எனவே மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே உள்ள அறையை பயன்படுத்துவார்கள். 
Tags:    

Similar News