செய்திகள்

மாணவர்கள் சேரவிரும்பாததால் இந்த ஆண்டு 15 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் நிரம்பாது

Published On 2018-05-21 07:28 GMT   |   Update On 2018-05-21 07:28 GMT
என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் விரும்பாததால் இந்தாண்டு பதினைந்து ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன. #Engineering
சென்னை:

சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்களிடம் அதிக மவுசு இருந்தது. போட்டி போட்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் என்ஜினீயரிங் படித்து வந்தனர். ஆனால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து என்ஜினீயரிங் படிப்பு மீதான மவுசு குறைந்து கொண்டே வருகிறது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் இடங்கள் முழுமையாக நிரம்பாமல் காலியாக இருந்தன. இதன் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. மேலும், பல என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன.

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் ஆண்டு சேர்க்கையை நிறுத்தும்படியும் சில கல்லூரிகளை மூடும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. என்ஜினீயரிங்கில் சில பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் அந்த பாடப்பிரிவை நீக்கும்படியும் கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 139 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடங்களை குறைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டைவிட 15 ஆயிரத்து 981 என்ஜினீயரிங் இடங்கள் இந்த ஆண்டு குறைகிறது.

தமிழ்நாட்டில் 12 என்ஜினீயரிங் கல்லூரிகளை மூட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 3252 இடங்கள் குறைகிறது. 9 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை அனுமதி அளிக்கப்படவில்லை. 87 என்ஜினீயரிங் கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை.

இந்த ஆண்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 57 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்களை குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. #Engineering
Tags:    

Similar News