செய்திகள்

வேளாண் படிப்புக்கு இன்று முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Published On 2018-05-18 16:28 IST   |   Update On 2018-05-18 16:28:00 IST
வேளாண் படிப்புக்கு இன்று முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.
வடவள்ளி:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூரியில் 2,160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன.

தொழிற்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1262 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை கொண்டு வந்து சரிபார்க்க வேண்டும்.

பிளஸ்-2 மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர் சேர்க்கை ஆன்-லைன் மூலம் நடைபெறும்.

அதன்படி இன்று (18-ந்தேதி) முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.

சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சரிபார்ப்பு அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெறும்.

தரவரிசை பட்டியல் ஜூன் 22-ந்தேதி வெளியிடப்படுகிறது.

இதில் 65 சதவீத மாணவர்கள் கோவை வேளாண்மை கல்லூரியிலும், 35 சதவீதம் இணை மற்றும் உறுப்பு கல்லூரிகளிலும் நடைபெறும். இதனிடையே மே 21-ந்தேதி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்து சந்தேகம் மற்றும் முறைகள் குறித்து கல்லூரி வளாகத்தில் திறந்த வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்க உள்ளனர்.

இதில் மாணவர்கள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கும் முறையில் உள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். #Tamilnews
Tags:    

Similar News