செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே கோவில் விழாவில் கபடி போட்டி

Published On 2018-05-16 17:13 GMT   |   Update On 2018-05-16 17:13 GMT
ஓட்டப்பிடாரம் அருகே கோவில் விழாவையொட்டி கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற முப்புலிவெட்டி ஜெயசேகர் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 18-வது ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. போட்டிக்கு ஊர் தலைவர் ஜோசி தலைமை தாங்கினார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டனர்.

இறுதி போட்டியில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணியும் தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணியும் மோதின. இறுதி போட்டியை தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் தொடங்கி வைத்தார். இதில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு ரூ.26 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

2-வது பரிசு பெற்ற தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணிக்கு ரூ.21 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, சிலோன் காலனி தில்லைநாயகம், முப்புலி வெட்டி சங்கரநாராயணன், தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் பலர் பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார்.

Tags:    

Similar News