செய்திகள்

ராமநாதபுரத்தில் ஆசிரியர் பயிற்றுனர்- பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-05-16 14:49 IST   |   Update On 2018-05-16 14:49:00 IST
ஆசிரியர் பயிற்றுனர் உள்பட இருவரிடம் 17 பவுன் நகையை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே வழுதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுதாகர். மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுகன்யா (வயது29).

இரவில் வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக வந்து சுகன்யா கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (32). திருப்புல்லாணி வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றுகிறார்.

குடும்பத்துடன் மதுரையில் இருந்து ராமநாதபுரம் பஸ்சில் பயணித்தார். ராமநாதபுரம் சர்ச் நிறுத்தத்தில் பஸ்சிலிருந்து இறங்கினர்.

அப்போது அவர்கள் கொண்டு வந்த உடமைகளில் 8 பவுன் நகை வைத்திருந்த கைப்பை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டனர். மாயமான நகையின் மதிப்பு ரூ.1 1/2 லட்சமாகும். புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News