செய்திகள்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்

Published On 2018-05-15 22:00 IST   |   Update On 2018-05-15 22:00:00 IST
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அடியக்கமங்கலத்தில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்்க மத்திய அரசு காலம் கடத்தி தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இதனால் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு துணை போகின்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மக்களை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக தே.மு.தி.க.வினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி மத்்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் அருள் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் பேசினார். முன்னதாக ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் முகமது சபீர்தீன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜேம்ஸ் நன்றி கூறினார். 
Tags:    

Similar News