செய்திகள்

பெருந்துறை அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-05-08 23:34 IST   |   Update On 2018-05-08 23:34:00 IST
பெருந்துறை அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:

பெருந்துறை ஈரோடு ரோடு கந்தாம்பாளையம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது52).

இவர் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை இவர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்லாமல் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். மற்ற பணியாளர்கள் சாப்பிடுவற்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் கம்பெனி வளாகத்தில் உள்ள ஒரு குடோனில் விஸ்வநாதன் தூக்கு போட்டு கொண்டார். சாப்பிட்டு விட்டு குடோனுக்கு வந்த ஊழியர்கள் அவர் தூக்கு போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக வந்து தூக்கில் தொங்கி கொண்டிருந்த விஸ்வநாதனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு வழக்கு பதிவு செய்து அவரது உடலை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இறந்த விஸ்வநாதனுக்கு மணிமேகலை (43) என்ற மனைவி, பிருந்தா (20) என்ற மகள் தருண் (14) என்ற மகன் உள்ளனர்.

Similar News