செய்திகள்

ஈரோடு அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

Published On 2018-05-08 23:26 IST   |   Update On 2018-05-08 23:26:00 IST
ஈரோடு தொட்டிபாளையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.
ஈரோடு:

ஈரோடு தொட்டிபாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் பிணத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்தது. அப்போது அவர் ஈரோடு சூரியம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பது தெரியவந்தது.

காவலாளியான அவர் நேற்று அந்த தண்டவாள பகுதியில் நடந்து சென்றார். அவர் அந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ரெயிலில் செல்லத்துரை அடிபட்டு பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News