செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவில் பேனர்கள் கிழிப்பு- சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிமடம்
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பேருந்து நிறுத்தத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இது குறித்து விடுதலை சிறுத்தை அமைப்பினர் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட மற்றொரு பேனரும் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கங்கை கொண்டசோழபுரம் பேருந்து நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந் தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி, நித்யா ஆகியோர் பேனர் கிழித்தவர்களை கைது செய்து விட்டோம் எனக்கூறினர்.
ஆனாலும் கைது செய்தவர்களை காட்டினால்தான் கலைந்து செல்வோம் எனக்கூறினர். தொடர்ந்து சென்னை-கும்பகோணம் சாலை ஜெயங்கொண்டம் குறுக்குரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அரியலூர் கூடுதல் எஸ்.பி. சண்முகநாதன், மற்றும் எஸ்.பி. அபிநவ்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.