செய்திகள்

விதிமுறைகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும்- போக்குவரத்து அதிகாரி அறிவுரை

Published On 2018-04-24 21:35 IST   |   Update On 2018-04-24 21:35:00 IST
வாகனம் ஓட்டும் போது விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என அரியலூர் மக்களுக்கு போக்குவரத்து அதிகாரி அறிவுரை வழங்கினார்.
அரியலூர்:

அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வரும் 29ம் தேதி வரை நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து  விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேருந்து நிலையம், அண்ணா சிலை, எம்ஜிஆர். சிலை, சின்னகடைத்தெரு, தேரடி, சத்திரம், மாதா கோவில் வழியாக ஒற்றுமை திடலை சென்றடைந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, வெங்கடேசன், அசோக்குமார், சுதாகர், ராஜா, ஜெமீன்வெங்கடேசன், ஜீவா, சக்தி, சகானா காமராஜ், மற்றும் ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் பேசும் போது,  இருக்கையில் சரியான முறையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டும், வாகனம் ஓட்டும் போது அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும், பாலங்கள், குறுகிய சாலை வளைவுகளில் முந்தக்கூடாது, போக்குவரத்து சின்னங்களை மதித்து சிக்னல் பெற்ற உடன் செல்ல வேண்டும், மஞ்சள் கோட்டை தாண்ட கூடாது, திடீரென தடம் மாறி செல்லக்கூடாது, சாலை விதிமுறைகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும், அரியலூர் மாவட்டம் சாலை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். #tamilnews

Similar News