செய்திகள்

எஸ்.வி.சேகர் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுக்க வேண்டும்- கனிமொழி

Published On 2018-04-20 14:10 IST   |   Update On 2018-04-20 14:10:00 IST
பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட அவதூறு கருத்தை எஸ்.வி.சேகர் நீக்கினாலும் அவர் மீது பா.ஜனதா கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்தார்.
ஆலந்தூர்:

தி.மு.க. எம்.பி.கனிமொழி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்த ஒரு செயலுக்காக எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தோம் பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்படிப்பட்ட சூழலில் அந்த பெண் பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களையும் மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு கருத்தை எஸ்.வி.சேகர் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.


இந்த கருத்தை அவர் நீக்கினாலும் பதிவு செய்ததற்காக அவர் மீது பா.ஜனதா கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கம் போல் இதுவும் அவரது சொந்த கருத்து என்று நழுவக்கூடாது. அந்த கருத்து தவறு என்று அந்த கட்சியின் தலைவர்கள் நினைத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News