செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் - அய்யாக்கண்ணு

Published On 2018-04-14 09:12 GMT   |   Update On 2018-04-14 09:12 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார். #caveryissue

அரியலூர்:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தமிழகம் முழுவதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார். அரியலூரில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள விவசாயிகளை விரட்டிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டு வரும் மரபணு செய்யப்பட்ட விதைகளை சாகுபடி செய்து மத்திய அரசு லாபம் பார்க்க நினைக்கிறது. இதனால் வருங்கால இளைஞர்கள் ஆண்மையை இழக்க நேரிடும். அதே போன்று பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழப்பார்கள். தமிழக விவசாயிகள் எதிர்க்கும் இந்த திட்டத்தை பிரதமர் வளர்க்க முனைப்பாக உள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுத்தால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்பதால் இங்கு அத்திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.

பூமியிலிருந்து தண்ணீரை நாம் எப்படி பிரித்து எடுக்கிறோமோ? அதுபோல மழை காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை பூமிக்குள் கொண்டு செல்லும் முறையை அரசு நடைமுறைபடுத்த வேண்டும். வரும் கோடைகாலங்களில் ஏரி,குளங்கள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளோம். பிரதமர் மோடி விவசாயிகளை கேவலமாக தற்போது பார்க்கிறார். தேர்தல் நேரத்தில் விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு என பேசுவார். பின்னர் விவசாயிகளை மறந்து விடுவார்.

இவ்வாறு அவர் கூறினார். #caveryissue

Tags:    

Similar News