செய்திகள்

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை

Published On 2018-04-03 12:07 GMT   |   Update On 2018-04-03 12:07 GMT
பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பழுதடைந்து உள்ள குடிநீர் தொட்டியை பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து பயன்படாமல் இருந்து வருகின்றது.

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகாலை முதல் இரவு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயனித்து வருகின்றன.இதனையடுத்து பொன்ன மராவதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளிருந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் உள்ளிட்டோர் மற்றும் கிராம பகுதிகளில் உற்பத்தி செய்யும் காய்கனிகளை விற்பனைகாக கொண்டு வரும் விவசாயிகளின் பிரதான சந்திப்பு இடமாகவும் இருந்து வருகிறது.

அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்பே நாளுக்கு நாள் அதிரிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கதை தனிக்க பெரிதும் உதவியாக இருந்து வந்த குடிநீர் தொட்டி கடந்த நான்கு மாதங்களாக செயல்படாமல் காணப்படுகிறது.

இதனால் அனைத்து தரப்பினரும் பெரிதும் சிரம்பட்டு வருகின்றனர்.இதனை பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News