செய்திகள்
திருப்பாச்சேத்தியில் வீடு புகுந்து பெண்ணிடம் தகராறு-ராணுவ வீரர் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்ததாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது33).
இவர் வீட்டில் தனியாக இருந்தபோது ஆவரங்கோட்டை சேர்ந்த முருகன் மகன் முத்தையா (27) தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது
மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து முத்தையா கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் ராணுவ வீரராக இருக்கும் இவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.