செய்திகள்

மானாமதுரையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-03-23 15:55 IST   |   Update On 2018-03-23 15:55:00 IST
சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரண வழங்கக்கோரி மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை:

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.100 நாள் வேலைத்திட்டத்தில் தினக்கூலி ரூபாய் 208 வழங்க வேண்டும்.

2016-17 பயிர்க்காப்பீடு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வீரபாண்டி, மாவட்டத் தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முனியராஜ் விஜயகுமார், மானாமதுரை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளமுத்து, ராஜாராம், முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினர். #tamilnews

Similar News