செய்திகள்
திருப்பத்தூர் அருகே மினி லாரி மோதி வாலிபர் பலி
திருப்பத்தூர் அருகே மினி லாரி மோதியதில் வாலிபர் பலியானார். இது தொடர்பாக மினி லாரியை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள சமஸ்கான் பள்ளியை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் அஜ்மீர் காஜா (வயது 24).
இவர் இன்று காலை திருப்பத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூருக்கு ஜவுளி ஏற்றிக்கு கொண்டு மினி லாரி புறப்பட்டது. காரையூர் பக்கம் வந்து கொண்டு இருந்த போது 2 வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அஜ்மீர்காஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜ்மீர் காஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மினி லாரியை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews