செய்திகள்

தமிழக அரசியலுக்கு நடிகர்கள் இனி தேவை இல்லை- அன்புமணி

Published On 2018-03-21 13:19 IST   |   Update On 2018-03-21 13:19:00 IST
தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் நடிகர்கள் நாசமாக்கியது போதும் எனவும் இனி தமிழக அரசியலுக்கு நடிகர்கள் தேவையில்லை எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு அனுமதி பெற்று முறையாக யார் வேண்டுமானாலும் யாத்திரை நடத்தலாம். அரசியல் கட்சிகளாக நாங்கள் காவிரி சம்பந்தமாக அமைதியான முறையில் அனுமதி பெற்று யாத்திரை நடத்துவோம். சட்டம்-ஒழுங்கு காப்பது அரசின் கடமை.

தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் நடிகர்கள் நாசமாக்கியது போதும். இனி தமிழக அரசியலுக்கு நடிகர்கள் தேவையில்லை. படித்தவர்கள், இளைஞர்கள், சாதனையாளர்கள்தான் தேவை.

பெரியாரை காந்தி அளவுக்கு நாங்கள் மதிக்கிறோம். பெரியார் சிலையை உடைத்தவர்களை, அதை தூண்டுவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.



எச்.ராஜா மீதும் அவரது அட்மின் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்து இருந்தால் பெரியார் சிலை உடைப்பு தொடர்ந்து நடந்து இருக்காது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வருகிற 29-ந்தேதி வரை காலஅவகாசம் இருக்கிறது.

மத்திய அரசு இதற்குள் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் நாடு எதிர்பார்க்காத போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News