செய்திகள்

சிவகங்கை அருகே காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல்- 3 பேர் மீது வழக்கு

Published On 2018-03-18 20:19 IST   |   Update On 2018-03-18 20:19:00 IST
சிவகங்கை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தைச் சேர்ந்தவர் ரகுவரன் (வயது27). இவர் கும்பகோணத்தில் உள்ள கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியைச்சேர்ந்த கற்பகவள்ளி (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ரகுவரனும், கற்பகவள்ளியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்களின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. “ரகுவரனை விட்டு விலகி விடு” என்று கற்பகவள்ளியை ரகுவரனின் உறவினர்கள் மிரட்டி வந்தனர். இதை கற்பகவள்ளி காதில் வாங்கி கொள்ளவில்லை.

இந்த நிலையில் ரகுவரனின் உறவினர்களான செல்வராணி, சீமைச்சாமி, விஜயா ஆகியோர் சேர்ந்து கற்பகவள்ளியை மிரட்டி தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து கற்பக வள்ளி சிவகங்கை போலீஸ் துணை சூப்பிரண்டு மங்களேஸ்வரனிடம் புகார் செய்தார்.

பின்னர் சிகிச்சைக்காக காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். கற்பகவள்ளியின் புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Similar News