செய்திகள்

நீதிபதிகள் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு

Published On 2018-03-18 17:02 IST   |   Update On 2018-03-18 17:02:00 IST
தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில் அவர்கள் பிரச்சனை தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் கோட்ராம் பாளையம் தெருவில் புதிய தொழிலாளர் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

இதையொட்டி காஞ்சீபுரம் காந்திரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நீதிமன்றத்திற்கான கல்வெட்டை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தொழிலாளர்களின் நலன் கருதி காஞ்சீபுரத்தின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு தொழிலாளர் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில் அவர்கள் பிரச்சனை தொடர்பான வழக்குகளை விரைந்து தீர்வு காண வேண்டும். அந்த வழக்களில் வாதாடும் வக்கீல்களும் பொறுப்புடன் செயல்பட்டு அவர்களுக்கு உதவிட வேண்டும்.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை கண்டுபிடித்து அவர்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்புகளை வழங்குவதற்கு இதுபோன்ற தொழிலாளர்கள் நீதிமன்றங்கள் இன்றியமையாதவை.

விரைவான, தரமான தீர்ப்புகளை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிபதிகள் வழங்கவேண்டும். நீதித்துறை நீதிபதிகள் மட்டும் கொண்டுள்ளது அல்ல.

வழக்கறிஞர்களும் நன்கு தயார்செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க நீதிபதிகளுக்கு உதவவேண்டும். நிறைய தரமான, விரைவான தீர்ப்புகள் வழக்கறிஞர்களின் உதவியால்தால் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறப்பணிப்பதால் நீதிபதிகள் நஷ்டமடைவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தவர்கள் நஷ்டமடைகிறார்கள். இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த முழுநேர வழக்கறிஞர் தொழிலையே நம்பியிருக்கும் வழக்கறிஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நீதிபதிகள் விரைவான தரமான தீர்ப்புகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.ராஜா, என்.சேஷாயி, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.செல்வகுமார், காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி எண்-2 ஜி.கருணாநிதி, சார்பு நீதிபதி பாக்கியஜோதி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, நீதிபதி வேல் முருகன்.

காஞ்சீபுரம் பார் அசோசியேசன் தலைவர் கே.விஜயசுந்தரம், வக்கீல் சங்க தலைவர் பி.ஆசைத் தம்பி, காஞ்சீபுரம் அட்வ கேட் அசோசியேசன் தலைவர் கே.ரவிச்சந்திரன், அரசு வழக்கறிஞர்கள் கே.சம்பத், காமேஷ் குமார், இளவரசு, மூத்த வழக்கறிஞர்கள் ராஜகோபால், ஒய்.தியாகராஜன், சத் தியமூர்த்தி, தாங்கி க.பழனி, ஆர்.வி.உதயன் கலந்து கொண்டனர்.

Similar News