செய்திகள்

ஈக்காட்டுதாங்கலில் 150 பவுன் நகை கொள்ளை- போலீசில் பெண் புகார்

Published On 2018-03-17 15:35 IST   |   Update On 2018-03-17 15:35:00 IST
கிண்டி ஈக்காட்டுதாங்கலில் 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பெண் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

கிண்டி ஈக்காட்டுதாங்கல், அச்சுதன் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் அலமேலு (65). இவர் மகள், மருமகளுடன் வசித்து வருகிறார்.

சொத்து வரி கட்டுவதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பீரோவை பார்த்தார். அதில் இருந்த 150 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் இருந்த மகள், மருமகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து கிண்டி போலீசில் அலமேலு புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Similar News