செய்திகள்

கோயம்பேட்டில் சிலிண்டர் வெடித்து ஆட்டோ டிரைவர் பலி

Published On 2018-03-17 13:52 IST   |   Update On 2018-03-17 14:51:00 IST
கோயம்பேட்டில் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:

கோயம்பேடு நியூ காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் கணபதி டெய்லர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் மதன் (வயது 17) தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான்.

சரஸ்வதிக்கும் ஆட்டோ டிரைவர் அய்யப்பன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியை பிரிந்து கணபதி தனியாக சென்றுவிட்டார்.

சரஸ்வதியும் அய்யப்பனும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் ஒன்றாகவே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரஸ்வதியின் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது.

உடனடியாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த சரஸ்வதி, அய்யப்பன் மற்றும் மதன் ஆகிய 3 பேரும் பலத்த தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் இன்று காலை இறந்தார்.

சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதால் தீப்பிடித்ததாக தெரிகிறது. கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News