செய்திகள்

அரசு ஊழியரின் நிலத்தை அளக்க லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 7 ஆண்டுகள் சிறை

Published On 2018-02-12 21:37 IST   |   Update On 2018-02-12 21:37:00 IST
அரசு ஊழியரின் நிலத்தை அளக்க லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்  அருகே  உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்த வர் கருணாநிதி. அரசு போக்குவரத்து  கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க கடந்த 2012 ஆம் ஆண்டு செந்துறையை அடுத்த படைவெட்டிகுடிக்காடு கிராமத்தை சேர்ந்த நில அளவையர் மணிமொழி என்பவர் ரூ.2  ஆயிரத்து 500  லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை குற்றவி யல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி லஞ்சம் வாங்கிய நில அளவையர் மணிமொழிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். #tamilnews

Similar News