செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் அடையாளம் தெரியாத பெண் பிணம்
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரிக்கரையில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று மிதந்ததை பார்த்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி ஆகியோர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு மிதந்த உடல் பெண் என்பது தெரியவந்தது. அவரது உடலில் இரண்டு கால்களிலும் தையல் போடப்பட்டிருந்தது. கழுத்திலும் தையல் போடப்பட்டிருந்தது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews