செய்திகள்

மயிலாடுதுறை அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் தீ விபத்து

Published On 2018-02-07 16:34 IST   |   Update On 2018-02-07 16:34:00 IST
மயிலாடுதுறை அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றுக்கரை சித்தமல்லி ரோட்டு தெருவை சேர்ந்தவர் தில்லைசெல்வன். இவர் மணல்மேடு மின்வாரியத்தில் ஆபரேட்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி வாசுகி.சம்பவத்தன்று வீட்டில் வாசுகி கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. சிலிண்டர் அருகில் சென்று தீயை அணைக்க பயந்து வாசுகி வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் 12 பவுன் நகைகள் உள்பட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News