செய்திகள்

நெய்வேலியில் என்.எல்.சி.அதிகாரி மகள் மாயம்

Published On 2018-01-30 22:19 IST   |   Update On 2018-01-30 22:19:00 IST
நெய்வேலியில் தோழி வீட்டுக்கு சென்ற பட்டதாரி பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 24-வது வட்டம் என்.எல்.சி.குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் அறிவழகன். இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் இந்துமதி (வயது 26). எம்.இ.படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று மாலை பெற்றோரிடம் தோழிவீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு இந்துமதி வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அறிவழகன் தன் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

இதனைத்தொடர்ந்து அவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்நாத் வழக்குபதிவு செய்து மாயமான பட்டதாரி பெண் இந்துமதியை தேடி வருகின்றனர். #tamilnews

Similar News