சினிமா செய்திகள்

தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் அனுப்பி வைப்பு

Published On 2026-02-09 12:56 IST   |   Update On 2026-02-09 12:56:00 IST
  • ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.
  • தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்தால் இம்மாதமே ஜனநாயகம் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News