செய்திகள்

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2018-01-30 16:16 IST   |   Update On 2018-01-30 16:16:00 IST
சிதம்பரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றம் ஏற்பட்டதால் பைபர் படகு மூழ்கியது. இதில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உளள கிள்ளை கலைஞர்நகரை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி (வயது 42), சத்தியமூர்த்தி (35), முத்து (28). இவர்கள் 3 பேரும் ஒரு பைபர் படகில் கடந்த 28-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தில் பைபர்படகு மூழ்கியது. இதில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்தனர்.

இதில் சக்கரவர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோர் நீந்தி கரை திரும்பினர். ஆனால் முத்து மட்டும் காணவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கிள்ளை அருகே உள்ள சின்னவாய்க்காலில் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

Similar News