செய்திகள்

வேதாரண்யம் அருகே மாணவியிடம் சில்மி‌ஷம்: வடமாநில வாலிபர் கைது

Published On 2018-01-30 15:36 IST   |   Update On 2018-01-30 15:36:00 IST
வடமாநில வாலிபர் வேலைக்கு வந்த இடத்தில் மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த சம்பவம் நாகக்குடையான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாபட்டினம், நாகக் குடையான் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் தாய் வேலைக்கு சென்று விட்டதால் தனியாக இருந்தார். அவரிடம் வடமாநில வாலிபர் ஒருவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டார். உடனே அங்கிருந்த தப்பி ஓடிய வாலிபரை அப்பகுத மக்கள் சுற்றி வளைத்து பிடித்து கரியாபட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நூரான் மகன் சாதிக் (வயது 20) என்பதும், அவர் நாகையில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

வடமாநில வாலிபர் வேலைக்கு வந்த இடத்தில் மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த சம்பவம் நாகக்குடையான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Similar News