செய்திகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை

Published On 2018-01-29 16:16 IST   |   Update On 2018-01-29 16:16:00 IST
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. #tamilnaducm #globalinvestorsconference
சென்னை:

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில், தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டை 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு நடத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எம்.சி.சம்பத், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். #tamilnews #globalinvestorsconference

Similar News