செய்திகள்
துண்டு விரித்து விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்

பயிர் காப்பீடு தொகை வழங்ககோரி துண்டு விரித்து பிச்சை எடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2018-01-22 14:50 IST   |   Update On 2018-01-22 14:50:00 IST
பயிர் காப்பிட்டு தொகை வழங்க மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேதாரண்யம் அருகே விவாசாயிகள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கடை மடை பகுதியான வேதாரண்யத்தை அடுத்த கத்திரிபுலம் பகுதி விவசாயிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் கத்திரிப்புலம் பகுதி விவசாயிகளுக்கு இன்னும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் கத்திரிப் புலத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 35-வது நாளான நேற்று விவசாயிகள் துண்டை விரித்து பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர். இதில் வட்டார விவசாய சங்க தலைவர் ராஜன் தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இன்று விவசாயிகள் 36-வது நாளான பேராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள் உடனடியாக பயிர் காப்பிட்டு தொகை வழங்க மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். #tamilnews

Similar News