செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடி அரசு இருபாலர் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து கறம்பக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அரசு இருபாலர் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து கறம்பக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்புகோவில் முக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைசக்திவேல் தலைமை தாங்கினார்.
இதில் மாநில அரசியல் தலைமை குழு உறுப்பினர் பார்வேந்தன், மாவட்ட செயலாளர் விடுதலைகனல், மாவட்ட நிர்வாகி விடுதலை வேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரபாண்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணைச்செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார். #tamilnews